search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது மற்றும் 6-வது இடத்தை பறிக்க மிடில் ஆர்டர் வீரர்கள் தீராத பசியில் உள்ளனர்- ரோகித் சர்மா
    X

    4-வது மற்றும் 6-வது இடத்தை பறிக்க மிடில் ஆர்டர் வீரர்கள் தீராத பசியில் உள்ளனர்- ரோகித் சர்மா

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான 4-வது மற்றும் 6-வது இடத்தை பறிக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தீராத பசியில் உள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா இன்னும் உலகக் கோப்பைக்கான அணியை கண்டறியவில்லை. குறிப்பாக 4, 5 மற்றும் 6-வது இடத்திற்கு சரியான நபரை அடையாளம் காணவில்லை. ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரெய்னா, லோகேஷ் ராகுல், கருண் நாயர், அம்பதி ராயுடு ஆகியோர் இருந்த போதிலும் உறுதியாக இவர்தான் இந்த இடத்தில் விளையாடுவார் என்று குறிப்பிட முடியவில்லை. விக்கெட் கீப்பர் எம்எஸ் டோனி மட்டும் இந்த வரிசையில் ஏதாவது ஒன்றில் விளையாடுவார்.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, மணிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாடுவது குறித்து நேற்று ரோகித் சர்மா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மிடில் ஆர்டரில் 4-வது மற்றும் 6-வது இடத்தை பறிக்க வீரர்கள் தீராத பசியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

    மேலும் இதுகுறித்து கூறுகையில் ‘‘4-வது மற்றும் 6-வது இடத்திற்கான வீரர்களை இன்னும் கண்டறியவில்லை. இதுகுறித்து நாம் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், இந்த இடத்திற்கு விளையாட ஏராளமான வீரர்கள் உள்ளனர்.



    அந்த இடங்களுக்கு சரியான வீரர்களை கண்டறிவதற்கான அனைத்து வேலைகளிலும் நாங்கள் இறங்கியுள்ளோம். வீரர்கள் அந்த இடத்தில் களம் இறங்கி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்களது இடத்தை நிலையாக தக்கவைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

    இந்த தொடரில் 3, 4 மற்றும் 6-வது இடத்தை பறிக்க முயல்வார்கள். அனைத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் கண்களும் அந்த இடங்கள்தான் உள்ளது.

    அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்த அளவிற்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்க விரும்புகிறோம். ஒரு அணியான நாங்கள் இந்த திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் களம் இறங்கி, நிலையான இடத்த பிடிக்க வேண்டும் என வீரர்கள் தீராத பசியில் உள்ளனர் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
    Next Story
    ×