search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
    X

    10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘ஏ’ பிரிவிலும், இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அந்தந்த பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளும் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்பின் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ‘சூப்பர்-4’க்கு முன்னேறும்.

    ‘சூப்பர்-4’ல் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.



    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளதால் லீக் போட்டியில் வருகிற 19-ந்தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பதால் மீண்டும் ஒருமுறை செப்டம்பர் 23-ந்தேதி மோத வாய்ப்புள்ளது.

    அதன்பின் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் 28-ந்தேதி வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை நடத்தும். முதல் இரண்டு போட்டிகளும் உறுதியாக நடக்கும். 3-வது போட்டி விளையாடுவதை பொறுத்து அமையும்.

    10 நாட்களுக்குள் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    Next Story
    ×