search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைந்த இன்னிங்சில் 2000 ரன்கள்- பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் அசத்தல் சாதனை
    X

    குறைந்த இன்னிங்சில் 2000 ரன்கள்- பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் அசத்தல் சாதனை

    பாகிஸ்தான் பேட்ஸ்மேன் குறைந்த இன்னிங்சில் 2000-ம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். #AsiaCup2018 #BabarAzam
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங் காங் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 116 ரன்னில் சுருண்டது. பின்னர் சேஸிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன பாபர் ஆசம் 33 ரன்கள் சேர்த்தார். அவர் 27 ரன்களை தொடும்போது ஒருநாள் போட்டியில் 2000-ம் ரன்களை தொட்டார். இந்த ரன்களை எடுக்க 47 ஒருநாள் போட்டியில் 45 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது.

    Only @amlahash has reached the milestone of 2,000 ODI runs in fewer innings than
    @babarazam258
    ! #howzstat#PAKvHK#AsiaCup2018pic.twitter.com/XOteR5WGHL இதன்மூலம் விரைவாக இரண்டாயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 40 இன்னிங்சில் இரண்டாயிரம் ரன்கள் கடந்து முதல் இடத்தில் உள்ளார்.

    23 வயதாகும் பாபர் ஆசம் 47 ஒருநாள் போட்டியில் 45 இன்னிங்சில் களம் இறங்கி 8 சதம், 7 அரைசதங்களுடன் 2006 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 54.21 ஆகும்.
    Next Story
    ×