search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டு மாதத்திற்கு முன் தேர்வாளர், தற்போது பீகார் அணி வீரர்- எம்எல்ஏ மகனால் சர்ச்சை
    X

    இரண்டு மாதத்திற்கு முன் தேர்வாளர், தற்போது பீகார் அணி வீரர்- எம்எல்ஏ மகனால் சர்ச்சை

    இரண்டு மாதத்திற்கு முன்பு தேர்வுக்குழு உறுப்பினராக இருந்து எம்எல்ஏ மகன் ஒருவர், தற்போது சீனியர் அணி வீரராக தேர்வு செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. #BCA
    பீகார் ரஞ்சி டிராபி அணி உள்ளூர் தொடர்களில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், லோதாக கமிட்டியின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஓட்டுதான் போன்ற பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றது.

    இதற்கிடையில் வடகிழக்கு மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் ரஞ்சி டிராபியில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வருடத்தில் இருந்து பீகார் அணி ரஞ்சி டிராபியில் விளையாட இருக்கிறது.

    பாட்னா சென்ட்ரல் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ அருண் குமார் சிங்கா. இவரது மகன் ஆஷிஷ். 28 வயதாகும் இவர் கடந்த 2010-ம் ஆண்டு ரஞ்சி டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார். அப்போது ராஜஸ்தானை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் இன்னிங்சில் 16 ரன்களும், 2-வது இன்னிங்சில் 12 ரன்களும் அடித்தார். இந்த ஒரு போட்டியில் மட்டும்தான் அவர் விளையாடியுள்ளார்.

    அதன்பின் முக்கியமான தொடரில் அவர் பங்கேற்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான பீகார் மாநில அணியை தேர்வு செய்யும் தேர்வாளர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார்.

    இந்நிலையில் தற்போது இரண்டு மாதங்கள் கழித்து விஜய் ஹசாரே தொடருக்கான பீகார் சீனியர் அணியில் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது சக வீரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்வுக்குழுவில் இருந்தவர், தற்போது எப்படி சீனியர் அணிக்கு தேர்வாக முடியும் என்ற கேள்வி எழுந்தது.



    இந்த சர்ச்சை குறித்து ஆஷிஸ் கூறுகையில் ‘‘ஆமாம், நான் தேர்வுக் குழுவில் இடம் பிடித்திருந்தேன். தற்போது நான் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளேன். மேலும், நான் தேர்வுக்குழுவில் குறுகிய காலமே இடம்பிடித்திருந்தேன். அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஏதும் தரப்படவில்லை. பீகார் மாநில கிரிக்கெட் சங்கம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே தேர்வாளராக இருந்தேன்.

    எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் ஜார்க்கண்ட் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடும்போதும் எனது தந்தை எம்எல்ஏ தான். அதனால் இது எப்படி பிரச்சனையாகும். தற்போது நான் கிளப் அளவினால் போட்டியில் அக்டிவ் ஆக உள்ளேன். பீகார் அணி மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றதும், சீனியர் அணியில் விளையாட விரும்பினேன். பீகார் அணி மீண்டும் ரஞ்சி டிராபியில் விளையாட இருக்கும் நிலையில் அனைவரும் அதற்காக பெருமைப்பட வேண்டும். மாற்றாக வீரர்கள் மீத அவதூறு மறப்பக்கூடாது’’ என்றார்.
    Next Story
    ×