search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்- இலங்கை- வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்- இலங்கை- வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்

    6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை- வங்காளதேசம் மோதுகிறது. #AsianCupcricket

    துபாய்:

    ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு சார்ஜாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெறுகிறது. 1993-ல் அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.

    2016-ம் ஆண்டில் இருந்து 2 ஆண்டுக்கு ஒருமுறை 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி என சுழற்சி முறையில் நடத்த திட்டமிடப்பட்டது. கடைசியாக 2016-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த 20 ஓவர் ஆசிய கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.

    14-வது ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் இந்தப்போட்டி நடக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் 6 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘சூப்பர் 4’ சுற்றில் 4 அணிகளும் தலா 1 முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    20-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. ‘சூப்பர் 4’ சுற்று 21-ந்தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. இறுதிப்போட்டி 28-ந்தேதி நடக்கிறது.

    கேப்டன் வீராட்கோலிக்கு இந்தப்போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித்சர்மா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆங்காங்கை 18-ந்தேதியும், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 19-ந்தேதியும் சந்திக்கிறது.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    ஆசிய கோப்பையை இந்தியா 6 முறையும், இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன. #AsianCupcricket

    Next Story
    ×