search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை கிரிக்கெட்- சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார்- விவிஎஸ் லட்சுமண்
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட்- சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார்- விவிஎஸ் லட்சுமண்

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். #VVSLaxman #ShoaibMalik #AsiaCup
    ஐதராபாத்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் இந்தப்போட்டி நடக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    ‘சூப்பர் 4’ சுற்றில் 4 அணிகளும் ஒன்றுடன் ஒன்று ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரு அணிகளும் மோதுகின்றன.

    இந்த நிலையில் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பையில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார். இந்தியாவுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடுவார். இதனால் தான் அப்படி கூறுகிறேன். அவர் அனுபவம் வாய்ந்தவர். சுழற்பந்தை எதிர்கொள்வதில் சோயிப் மாலிக் சிறந்த பேட்ஸ்மேன். மிடில் ஓவரில் நன்றாக ஆடக்கூடியவர்.

    மேலும் பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்களான பகர் ஜமான், பாபர் ஆசம் ஆகியோரை அதிகமாக சார்ந்து இருக்கும்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீரர்களான யசுவேந்திர சஹாலும், குல்தீப் யாதவும் எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

    இவ்வாறு வி.வி.எஸ். லட்சுமண் கூறியுள்ளார். #VVSLaxman #ShoaibMalik #AsiaCup
    Next Story
    ×