search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்- பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
    X

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்- பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. #INDvPAK #SAFF
    7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது.

    ஒரு அரையிறுதியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் மோதின. இதில் மாலத்தீவு 3-0 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் 48-வது மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். சுமீத் பாஸ்சி 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 88-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஹசன் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. இந்தியா - மாலத்தீவு இடையிலான இறுதிப் போட்டி செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×