search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்- பாகிஸ்தான் கேப்டன்
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்- பாகிஸ்தான் கேப்டன்

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. 19-ந்தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கிறது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘எங்களுடைய முன்னேற்பாடுகள் (preparation) மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியா உடன் மோதுவதற்கு கிடைக்கும் ஓய்வு நாட்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்வோம்.

    இந்தியாவிற்கு எதிராக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு முதல் பெரிய ஆட்டம். அதனால் உத்வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்வோம். இந்தியாவிற்கு எதிராக முழுத்திறமையை வெளிப்படுத்துவோம்.



    பெரிய தொடரின்போது உத்வேகம் முக்கியமானது. உத்வேகம்தான் முக்கியமான ரோலாக இருக்கும். அணி அதிகமான நம்பிக்கையில் உள்ளது. மனஉறுதியும் சிறப்பாக உள்ளது. ஆக, முதல் போட்டியில் இருந்தே உத்வேகத்தை அதிகரித்து, அதை கடைசி வரை கொண்டு செல்வோம்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளத்தை பார்த்தீர்கள் என்றால், பொதுவாகவே ஸ்லோ பிட்ச் ஆகத்தான் இருக்கும். ஆகவே, ஸ்பின்னர்கள் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், 300 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயிக்க வேண்டும். அப்படி செய்தால், எங்களது பந்து வீச்சாளர்கள் எதிரணியை சாய்த்து விடுவார்கள்’’ என்றார்.
    Next Story
    ×