search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைநிலை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் சரியாக வேலை செய்யவில்லை- பும்ரா
    X

    கடைநிலை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் சரியாக வேலை செய்யவில்லை- பும்ரா

    இங்கிலாந்து கடைநிலை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் சரியான வேலை செய்யவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் இந்தியாவின் அபார பந்து வீச்சால் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 181 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்திருந்தது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது டெய்ல்எண்டர்ஸ்-களை வைத்து ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கடைசி 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துவிட்டது. இதுதான் இந்தியாவிற்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. பட்லர் 89 ரன்களும், அடில் ரஷித் 15 ரன்களும், ஸ்டூவர்ட் பிராட் 38 ரன்களும் அடித்தனர்.

    இந்நிலையில் டெய்ல்எண்டர்ஸ் பெட்ஸ்மேன்களுக்கு எதிராக எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘கூடுதலாக ஒரு பந்து வீச்சாளருடன் களம் இறங்கும்போது, அது சில வசதிகளை ஏற்படுத்தும். நான்கு பந்து வீச்சாளர்களுடன் டெய்ல்எண்டர்ஸ்-க்கு பந்து வீசும்போது அதிக ஓவர்கள் வீசிய வேண்டியுள்ளது. ஏனென்றால், உடனடியாக அடுத்த ஸ்பெல் வீச வேண்டியுள்ளது.

    லோ-ஆர்டன் பேட்ஸ்மேன்களுக்கு என ஸ்பெஷல் திட்டம் ஏதும் நாங்கள் வகுக்கவில்லை. எங்களுடைய திட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை.’’ என்றார்.
    Next Story
    ×