search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் ஓவல் டெஸ்ட் - இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    லண்டன் ஓவல் டெஸ்ட் - இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்

    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தனர். விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  



    உணவு இடைவேளையில், இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஆகியோரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார்.

    இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் - ஸ்டூவர்ட் பிராடு ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvIND
    Next Story
    ×