search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பையில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகம் - ஹசன் அலி
    X

    ஆசிய கோப்பையில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகம் - ஹசன் அலி

    ஆசிய கோப்பை தொடரில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சம் என்று அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார். #AsiaCup2018 #ViratKohli #HasanAli
    கராச்சி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 19-ந்தேதி சந்திக்கிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் இந்திய அணி, ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது.

    இந்த நிலையில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சம் என்று அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய கேப்டன் விராட் கோலி, உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர், ஜாம்பவான். தனி வீரராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடியவர். எப்படிப்பட்ட சூழலிலும் நெருக்கடியை திறம்பட கையாளக்கூடியவர். அவருக்கு பதிலாக இடம் பெறும் வீரரால் அவர் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியாது. அதனால் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று ஒவ்வொரு இளம் பவுலர்களும் விரும்புவார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த முறை வரவில்லை. அதே நேரத்தில் கோலி இல்லாவிட்டாலும் இந்தியா சிறந்த அணி தான். மேலும் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

    இந்தியாவை நாங்கள் கடைசியாக சந்தித்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். இந்த தோல்வியால் இந்திய அணிக்கு நெருக்கடி இருக்கும். அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். அது எங்களுக்கு உள்ளூர் போன்றது. அங்குள்ள சீதோஷ்ண நிலையை நன்கு அறிவோம். இவை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுகூலமான விஷயமாகும்.

    இவ்வாறு ஹசன் அலி கூறினார். #AsiaCup #AsiaCup2018 #ViratKohli #HasanAli
    Next Story
    ×