search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓவல் டெஸ்ட் - முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 198/7
    X

    ஓவல் டெஸ்ட் - முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 198/7

    இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமானர். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இடம்பிடித்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, 23 ரன்கள் அடித்திருந்த ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. 

    பின்னர் அலஸ்டர் குக் தனது 71வது ரன்னில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ரூட் (0), பரிஸ்டோ (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். 

    சிறப்பாக விளையாடிய மொயின் அலி (50) தனது அரை சதத்தினை பதிவு செய்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குர்ரன் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதில் ஜோஸ் பட்லர் 11 ரன்களும், அடில் ரஷித் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். 






    இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. #ENGvIND
    Next Story
    ×