search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடிய விரைவில் பொருளாதாரத்தை போன்றே விளையாட்டிலும் சிறந்த சக்தியாக இந்தியா விளங்கும் - ராஜ்நாத் சிங்
    X

    கூடிய விரைவில் பொருளாதாரத்தை போன்றே விளையாட்டிலும் சிறந்த சக்தியாக இந்தியா விளங்கும் - ராஜ்நாத் சிங்

    இந்தியா கூடிய விரைவில் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்த சக்தியாக விளங்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #AsianGames2018 #RajyavardhanSinghRathore #RajnathSingh
    புதுடெல்லி :

    சமீபத்தில் இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 69 பதக்கங்களை வென்று அசத்தியது.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெறுமையை தேடித் தந்த வீரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும்  மந்திரிகள் கிரன் ரிஜுஜூ, மகேஷ் சர்மா உள்ளிடோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில், தனியாக தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.40 லட்சமும், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு முறையே ரூ.20 லட்சம், ரூ.10 லட்சமும், அணியாக தங்கப்பதக்கம் வென்ற அணிகளுக்கு ரூ.60 லட்சமும்  பரிசுத்தொகையாக ராஜ்நாத் சிங் வழங்கினார்.


    அப்போது பேசிய ராஜ்நாத் சிங் இந்தியா கூடிய விரைவில் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்த சக்தியாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ’ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நம் வீரர்களின் திறமையை பார்த்து மெய் சிலிர்த்துவிட்டேன். விளையாட்டுத்துறையில் மந்திரி ராஜ்யவர்தன் சிங்கின் செயல்பாடுகள் ஒப்பிடமுடியாதது. விளையாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பை கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்.

    கூடிய விரைவில் பொருளாதாரத்தை போன்றே விளையாட்டிலும் சிறந்த சக்தியாக இந்தியா விளங்கும் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிர்வதிக்கிறேன்’ என அவர் கூறினார். #AsianGames2018 #RajyavardhanSinghRathore #RajnathSing
    Next Story
    ×