search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச அந்தஸ்தை பெறுகிறது லக்னோ ‘எகனா’ கிரிக்கெட் மைதானம்
    X

    சர்வதேச அந்தஸ்தை பெறுகிறது லக்னோ ‘எகனா’ கிரிக்கெட் மைதானம்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டியின் மூலம் உத்தர பிரதேசம் எகனா சர்வதேச கிரிக்கெட் மைதானம் சர்வதேச அந்தஸ்து பெறுகிறது. #INDvWI
    உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே கான்பூர் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. இதில் சர்வதேச போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு மைதானம் லக்னோவில் கட்டப்பட்டது.

    எகனா சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்ற பெயரைக் கொண்ட இந்த மைதானத்தில் கடந்த 2016-ல் இருந்து உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2017-18 சீசனில் மூன்று ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளும், இரண்டு துலீப் டிராபி போட்டிகளும் நடைபெற்றது.



    விரைவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் 2-வது போட்டி உத்தர பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்டம் கான்பூரில் நடக்குமா? லக்னோவில் நடக்குமா? என்று கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் இன்று போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 2-வது போட்டி லக்னோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் லக்னோ மைதானம் சர்வதேச அஸ்தஸ்து பெற இருக்கிறது.
    Next Story
    ×