search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது டெஸ்டில் விக்கெட் கீப்பராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்- பேர்ஸ்டோவ்
    X

    4-வது டெஸ்டில் விக்கெட் கீப்பராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்- பேர்ஸ்டோவ்

    இடது கைவிரல் முறிந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

    டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது (ஆண்டர்சன் வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது இடது கை நடுவிரலை பந்து பலமாக தாக்கியது). பின்னர் மருத்துவ பரிசோதனையில் விரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    3-வது டெஸ்டிற்கும் 4-வது டெஸ்டிற்கும் இடையில் சுமார் 10 நாட்கள் இடைவெளி இருந்ததால் அவரது காயம் குணமடைந்து அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆனால், காயம் முழுமையாக குணமடைந்தால்தான் அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். இல்லையெனில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் நான் விக்கெட் கீப்பர் பணியை செய்ய ஆர்வமாக இருக்கிறேன் என்று பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘‘விக்கெட் கீப்பர் பணியை நான் நேசிக்கிறேன். கடந்த 40 டெஸ்ட் போட்டிகளில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன்’’ குறிப்பிட்டுள்ளார். பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பர் பணியை செய்யவில்லை என்றால் பட்லர் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
    Next Story
    ×