search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாய்னாவைத் தொடர்ந்து பிவி சிந்துவும் அரையிறுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்
    X

    சாய்னாவைத் தொடர்ந்து பிவி சிந்துவும் அரையிறுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்

    பேட்மிண்டன் காலிறுதியில் தாய்லாந்து வீராங்கனையை 2-1 என வீழ்த்தி பிவி சிந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்கில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    ஒரு காலிறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், மற்றொரு காலிறுதியில் பிவி சிந்து தாய்லாந்தின் நிட்சயோன் ஜிண்டாபோல்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை 21-11 என பிவி சிந்து எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை சிறப்பாக விளையாடினார். இதனால் பிவி சிந்து 16-21 என இழந்தார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 21-14 என 3-வது செட்டை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். பிவி சிந்துவிற்கு இந்த வெற்றியை பெற 61 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    அரையிறுதிக்கு முன்னேறியதால் சாய்னாவைத் தொடர்ந்து பிவி சிந்துவும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதனால் பேட்மிண்டனில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கிறது.
    Next Story
    ×