search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    38 டெஸ்டிலும் வீரர்கள் மாற்றம் என்பது ரொம்ப ஓவர்- ஹர்பஜன் சிங்
    X

    38 டெஸ்டிலும் வீரர்கள் மாற்றம் என்பது ரொம்ப ஓவர்- ஹர்பஜன் சிங்

    விராட் கோலி தலைமையிலான 38 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மாற்றத்துடன் விளையாடியது ரொம் ஓவர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு பெற்றார். அதில் இருந்து இந்தியா அவரது தலைமையில் தற்போது வரை 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 22 முறை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று முடிவடைந்த டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

    விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து 38 டெஸ்டுகளிலும் வீரர்களை மாற்றியுள்ளார். அவர் 11 பேர் கொண்ட ஒரே அணியுடன் அடுத்த போட்டிகளில் விளையாடியது கிடையாது. இருந்தாலும் 22 வெற்றிகளை ருசித்துள்ளார். இப்படி 38 போட்டிகளிலும் வீரர்களை மாற்றியது மிகவும் ஓவர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்த வரைக்கும் 38 டெஸ்டிலும் மாற்றம் என்பது மிகவும் ஓவர் (Too Much). ஆனால், ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமானவர்கள். அதேபோல் ஒவ்வொரு அணியின் செயல்பாடும் வித்தியாசமானவை. இப்படி மாற்றுவது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். அதனால் மாற்ற விரும்புகிறார்கள்.



    இந்திய அணி தென்ஆப்பிரிக்கா தொடரில் வெற்றியை நெருங்கியது. இங்கிலாந்தில் வெற்றியை நோக்கி திரும்பியுள்ளனர். மாற்றத்தை கேப்டன் விரும்புகிறார். நிர்வாகம் அதை அங்கீகரித்து, வீரர்களை ஏற்றுக் கொண்டால், எனக்கு அது பெரிய விஷயம் அல்ல.

    விராட் கோலி மிகவும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் எளிதாக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களை நான் அதிக அளவில் பார்த்தது கிடையாது, மற்ற பேட்ஸ்மேன்களை விட கடினமான ஆடுகளத்தில் விராட் கோலி பேட்டிங் செய்கிறார்’’ என்றார்.
    Next Story
    ×