search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் தலா ஏழு கேட்ச்கள் பிடித்து லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் அசத்தல்
    X

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் தலா ஏழு கேட்ச்கள் பிடித்து லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் அசத்தல்

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய பும்ரா, 7 கேட்ச் பிடித்த லோகேஷ் ராகுல் ஆகியோர் சாதனைகள் படைத்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் இந்தியா அபாரமாக செயல்பட்டது.

    விராட் கோலி முதல் இன்னிங்சில் 97 ரன்களும், 2-வது இன்னிங்சில் 103 ரன்களும் குவித்தார். ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார்.

    பும்ரா நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 2014-ல் லார்ட்ஸ் டெஸ்டில் இஷாந்த் ஷர்மா 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

    லோகேஷ் ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 கேட்ச்கள் பிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் விக்கெட் கீப்பரை தவிர்த்து அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக அதிக கேட்ச் பிடித்ததில் 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இரண்டு வீரர்கள் தலா ஏழு கேட்ச்கள் பிடித்தது இதுதான் முதல் முறையாகும்.



    லார்ட்ஸ் டெஸ்டில் புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். அதன்பின் தற்போதுதான் ஹர்திக் பாண்டியா, பும்ரா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.

    நான்காவது இன்னிங்சில் பட்லர் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி 169 ரன்கள் குவித்தது. 100 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்த பின்னர் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுதான் முதன்முறை. ஒட்டுமொத்தமாக டிரென்ட் பிரிட்ஜியில் 2-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

    முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் பட்லர் தற்போது அடித்ததுதான் இந்த வருடத்தின் முதல் சதமாகும். இதற்கு முன் மெல்போர்னில் அலஸ்டைர் க் 2017 டிசம்பரில்சதம் அடித்திருந்தார்.
    Next Story
    ×