search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து மண்ணில் வெற்றியை ருசிக்கும் 6-வது இந்திய கேப்டன் கோலி
    X

    இங்கிலாந்து மண்ணில் வெற்றியை ருசிக்கும் 6-வது இந்திய கேப்டன் கோலி

    3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தினால், அந்நாட்டு மண்ணில் வெற்றி பெற்ற 6-வது இந்திய கேப்டன் என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார். #ENGvIND #Viratkohli
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 323 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. 168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 521 ரன் நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்று நடந்த 4-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 62 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து அதன் ஜோஸ் பட்லர்- பென் ஸ்டோக்ஸ் ஜோடி தாக்கு பிடித்து விளையாடிது. ஜோஸ் பட்லர் தனது முதல் சதத்தை அடித்தார். 106 ரன்னில் அவுட் ஆனார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்தனர்.

    அதன்பின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. பேர்ஸ்டோவ் (0). கிறிஸ் லோக்ஸ் (4), பென்ஸ்டோக்ஸ் (62), பிராய் (20) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்து இருந்தது. ரஷித் 30 ரன்னிலும், ஆன்டர்சன் 8 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    இன்று 5-து மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியா வெற்றிக்கு இன்று ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

    இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை விரைவிலேயே கைப்பற்றி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து மண்ணில் அஜித் வடகேர், கபில்தேவ், கங்குலி, ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 1932-ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா 1971-ம் ஆண்டு முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது.

    அஜித்வடகேர் தலைமையிலான இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்தியா 2 டெஸ்டில் (லார்ட்ஸ், மற்றும் சிட்னி) வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    2002-ம் ஆண்டு கங்குலி தலைமையில் சிட்னி டெஸ்டில் வெற்றி கிடைத்தது. 2007-ம் ஆண்டு ராகுல்டிராவிட் தலைமையிலான இந்தியா 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் (1-0) கைப்பற்றியது.

    2014-ம் ஆண்டு டோனி தலைமையில் இந்தியா லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியை ருசிக்க போகும் 6-வது இந்திய கேப்டன் விராட்கோலி என்ற சிறப்பை பெற போகிறார். #ENGvIND #Viratkohli
    Next Story
    ×