search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்- இங்கிலாந்து துணை பயிற்சியாளர்
    X

    விராட் கோலியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்- இங்கிலாந்து துணை பயிற்சியாளர்

    இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து துணை பயிற்சியாளர் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் 97 ரன்கள் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த விராட் கோலி, 2-வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். கடந்த 2014 சீசனில் ஐந்து டெஸ்டில் 134 ரன்கள் மட்டுமே அடித்த விராட் கோலி, இந்த சீசனில் மூன்று டெஸ்டில் இரண்டு சதம், இரண்டு அரைசதங்களுடன் 440 ரன்கள் குவித்துள்ளார்.

    சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்ட விராட் கோலியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அணி துணைப் பயிற்சியாளர் பால் பேர்பிரேஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து இங்கிலாந்து துணை பயிற்சியாயர் பால் பேர்பிரேஸ் கூறுகையில் ‘‘இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, அவருடைய ஆட்டத்தை மேம்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதேபோல் ஒரு வீரர் விளையாடுவதை பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது. அவர் ஹை-கோலிட்டி வீரர். இந்த தொடரில் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய யுக்தி, பயிற்சி, போட்டியில் அவருடைய ஈடுபாடு இந்த ரன்களை குவிக்க தகுதியானது.



    மற்ற வீரர்கள் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் மிகப்பெரிய அளவில் நம்புகிறேன். ஆகவே, சிறந்த வீரர்களாக நீங்கள் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், சிறந்த வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    எங்களுடைய பந்து வீச்சாளர்கள் ஏராளமான சான்ஸ் விராட் கோலிக்கு கிடைத்தது என்கிறார்கள். ஆனால் ஹை-கோலிட்டி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்’’ என்றார்.
    Next Story
    ×