search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி- இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி
    X

    ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி- இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

    இந்திய மகளிர் கபடி அணி 3-வது ஆட்டத்தில் 38-12 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ வெற்றியை ருசித்தது. #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்திய பெண்கள் கபடி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானையும் (43-12), 2-வது ஆட்டத்தில் தாய்லாந்தையும் (33-23) வீழ்த்தி இருந்தது.

    இந்திய மகளிர் கபடி அணி 3-வது ஆட்டத்தில் இன்று காலை இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்தியா 38-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்று ‘ஹாட்ரிக்‘ வெற்றியை ருசித்தது. பிற்பகலில் இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தோனேசியாவுடன் மோதுகிறது.

    இந்திய ஆண்கள் கபடி அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்துடன் இன்று மோதுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தையும், 2-வது ஆட்டத்தில் இலங்கையையும் வீழ்த்தியது. 3-வது போட்டியில் 23-24 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்றது.

    டேக் வாண்டோ போட்டியில் இந்திய வீரர் அக்‌ஷய் குமார் கால்இறுதிக்கு தகுதி பெற்றார். 80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் பங்கேற்ற அவர் இலங்கையை சேர்ந்த பொனாண்டோவை 13-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    துடுப்பு படகு போட்டியின் லைட்வெயிட் 4 பேர் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அணியில் போபால்சிங், ஜக்விர்சிங், தேஜஸ் ஷிண்டே, பிரணாய் இடம் பெற்று இருந்தனர்.

    இதேபோல பெண்கள் இரட்டையர் பிரிவில் ஹர்பரீத்கவூர்- சஞ்ஜூதா ஜோடியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பெண்கள் கைப்பந்து போட்டியில் இந்திய அணி 18-25, 22-25, 13-25 என்ற கணக்கில் வியட்னாமிடம் தோற்றது. இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வியாகும். ஏற்கனவே தென்கொரியாவிடம் தோற்று இருந்தது. #AsianGames2018
    Next Story
    ×