search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டுப் போட்டி- இறுதிச்சுற்றில் ஏமாற்றம் அளித்த சண்டேலா
    X

    ஆசிய விளையாட்டுப் போட்டி- இறுதிச்சுற்றில் ஏமாற்றம் அளித்த சண்டேலா

    ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சண்டேலா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிச்சுற்றில் 5-ம் இடத்தைப் பிடித்து வெளியேறினார். #AsianGames2018 #ApurviChandela
    ஜகார்த்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரவிக்குமாருடன் இணைந்து இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை (வெண்கலம்) வென்று கொடுத்த அபூர்வி சண்டேலா, மகளிர் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் பங்கேற்றார். மற்றொரு வீராங்கனை இளவேனில் வளரிவனும் பங்கேற்றார்.

    தகுதி சுற்றில் 2-வது இடத்தைப் பிடித்த அபூர்வி சண்டேலா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இளவேனில் 14-வது இடத்திற்கு பின்தங்கியதால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவில்லை.

    அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சண்டேலா எப்படியும் பதக்கத்தை உறுதி செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. துவக்க சுற்றுகளில் சிறப்பாக புள்ளிகளை குவித்த சண்டேலா, அதன்பின்னர் பின்தங்கினார். இறுதியில் 186 புள்ளிகளை பெற்ற சண்டேலா 5-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இந்த பிரிவில் சீனாவின் ரோஜு ஜாவோ தங்கப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் ஜங் வெள்ளிப் பதக்கமும், மங்கோலியாவின் நந்தின்ஜயா வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.  #AsianGames2018 #ApurviChandela
    Next Story
    ×