search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு- பேட்மிண்டன் காலிறுதியில் வெளியேறியது இந்திய மகளிர் அணி
    X

    ஆசிய விளையாட்டு- பேட்மிண்டன் காலிறுதியில் வெளியேறியது இந்திய மகளிர் அணி

    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி காலிறுதியில் ஜப்பான் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. #AsianGames2018 #BadmintonIndiaTeam
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பேட்மிண்டன் மகளிர் அணிகளுக்கான காலிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் பி.வி. சிந்து 21-18, 21-19 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின்னர் நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சிக்கி ரெட்டி- ஆரத்தி சாரா ஜோடி ஜப்பான் ஜோடியிடம் 15-21, 6-21 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்தது. நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலும் ஏமாற்றம் அளித்தார். கடுமையாக போராடிய அவர் நசோமி ஒகுஹராவிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஜப்பான் 2-1 என முன்னனிலை பெற்றது.

    கடைசியாக நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் அஷ்வினி பொன்னப்பா-பி.வி.சிந்து ஜோடி, மத்சுடோமோ- ரகாஷாஷி ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய ஜோடி 13-21, 12-21 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்தது. இதனால் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது. #AsianGames2018 #BadmintonIndiaTeam
    Next Story
    ×