என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய விளையாட்டுப் போட்டி - வெற்றியுடன் தொடங்கினார் பி.வி.சிந்து
Byமாலை மலர்20 Aug 2018 4:00 AM GMT (Updated: 20 Aug 2018 4:00 AM GMT)
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தினார். #AsiansGames2018 #PVSindhu
ஜகார்த்தா:
இதேபோல் நீச்சல் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ், 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 26.10 வினாடிகளில் இலக்கை எட்டி தேசிய சாதனையை முறியடித்தார். இவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 800 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் அத்வைத் பேஜ் முதல் சுற்றில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் ரவி குமார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #AsiansGames2018 #PVSindhu
இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பேட்மிண்டன் மகளிர் அணிகளுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமசுச்சியை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியில் பி.வி. சிந்து 21-18, 21-19 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது.
இதேபோல் நீச்சல் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ், 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 26.10 வினாடிகளில் இலக்கை எட்டி தேசிய சாதனையை முறியடித்தார். இவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 800 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் அத்வைத் பேஜ் முதல் சுற்றில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் ரவி குமார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #AsiansGames2018 #PVSindhu
Next Story
×