search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்
    X

    ஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. #AsianGames2018

    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 11,300 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.

    இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 570 பேர் பங்கேற்று உள்ளனர். 36 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆசிய விளையாட்டில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியது.

    தொடக்க நாளில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி கூடுதலில் இந்த பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர். இந்திய ஜோடி 429.9 புள்ளிகள் பெற்றது. சீன தைபேக்கு தங்கமும், சீனாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

    10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மனுபாக்கர்-அபிஷேக் வாமா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 6-வது இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

    ‘டிராப்’ பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஷிரேயாஷிசிங் (71 புள்ளி), சீமா தோமர் (71 புள்ளி) ஆகியோரும் ஆண்கள் பிரிவில் மனவஜித்சிங் சாந்து (72 புள்ளி), லக்சாய் (71 பள்ளி) ஆகியோரும் முன்னேற்றம் அடைந்தனர்.

    ஆசிய விளையாட்டில் சீனா முதல் தங்கத்தை வென்றது. முன்னதாக நடந்த ஆண்களுக்கான ஊசூ போட்டியில் சீனா வீரர் பெய்குயின் தங்கம் வென்றார். ‘சாங்குவான்’ பிரிவில் பங்கேற்ற அவர் 975 புள்ளிகளை எடுத்தார்.

    இந்தோனேசியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. அந்நாட்டைச் சேர்ந்த எட்கர் சேவியர் மார்வெகா 972 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். சீன தைபேவுக்கு வெண்கலம் கிடைத்தது.

    Next Story
    ×