என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொல்லார்டு வீசிய ஓவரில் 5 சிக்ஸ் உடன் 32 ரன்கள் குவித்த டேரன் பிராவோ
Byமாலை மலர்17 Aug 2018 10:52 AM GMT (Updated: 17 Aug 2018 10:52 AM GMT)
கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு வீசிய ஓரே ஓவரில் டேரன் பிராவோ ஐந்து சிக்ஸ் உள்பட 32 ரன்கள் குவித்து அசத்தினார். #CPL2018
கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த லூசியா 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்திருந்தது.
கடைசி 5 ஓவரில், அதாவது 30 பந்தில் 85 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மெக்கல்லம், டேரன் பிராவோ களத்தில் இருந்தனர்.
16-வது ஓவரை பொல்லார்டு வீசினார். டேரன் பிராவோ பந்தை எதிர்கொண்டார். முதல் நான்கு பந்துகளிலும் இமாலய சிக்ஸ் விளாசினார் பிராவோ. ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். பந்து பேட்டில் சரியாக படாததால் மிட்ஆஃப் திசையில் சென்றது. அதில் இரண்டு ரன்கள் கிடைத்தது. சிக்ஸருக்குத்தான் முயற்சி செய்தார். ஆனால், இரண்டு ரன்களே கிடைத்தது.
அடுத்த பந்தை மீண்டும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசினார் டேரன் பிராவோ. பொல்லார்டு ஒரே ஓவரில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அடுத்த 24 பந்தில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 53 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்.

Next Story
×