
இந்நிலையில் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால், களம் இறங்க தயார் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இதுவரை எனக்கு டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்ற வாய்ப்பு வந்ததில்லை. ஆனால், அணி நிர்வாகம் விரும்பினால் தொடக்க வீரராக களம் இறங்க தயாராக இருக்கிறேன்.

நான் ஒருநாள் போட்டியிலும் விளையாடும்போதோ, இந்திய அணியில் இடம்பிடித்தபோதோ நான் தொடக்க வீரராக களம் இறங்குவேன் நினைத்தது கூட கிடையாது. ஆனால் நாட்கள் செல்லசெல்ல அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆகவே, நான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அதற்கு வாய்ப்பு அடைக்கப்படவில்லை. வாய்ப்பு என்னைத் தேடி வந்தால், அதை ஏற்றுக் கொள்வேன்’’ என்றார்.