search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்காக விளையாடுவதை பற்றி சிந்திக்கவில்லை- பிரித்வி ஷா
    X

    இந்தியாவிற்காக விளையாடுவதை பற்றி சிந்திக்கவில்லை- பிரித்வி ஷா

    இந்திய தேசிய அணிக்காக விளையாடுவது பற்றி சிந்திக்கவில்லை என்று 19 வயது இளைஞரான பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். #PrithviShaw
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தொடக்க பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் விமர்சனம் எழுப்பி வருகிறார்கள்.

    இதற்கிடையே நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக பிரித்வி ஷா செயல்பட்டார். இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ரஞ்சி டிராபி மற்றும் உள்ளூர் தொடர்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியில் பிரித்வி ஷாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.



    இந்நிலையில் இந்திய அணியில் விளையாடுவது பற்றி நினைக்கவில்லை என்று பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதுகுறித்து பிரித்வி ஷா கூறுகையில் ‘‘கவாஸ்கர் சார் கூறியிருந்ததை எனது நண்பர் ஒருவர் எனக்கு ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பியிருந்தால். அவர் என்னை வாழ்த்தியிருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் இந்தியாவிற்காக விளையாடுவது பற்றி சிந்திக்கவில்லை. நான் வாய்ப்பை பயன்படுத்தி அதிக ரன்கள் குவிப்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். நான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன். நேராக இந்திய அணியில் இடம்பிடிப்பது பற்றி யோசிக்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×