search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடும் லெவனை தேர்வு செய்வதில் பெரிய தலைவலி காத்திருக்கிறது- ஜோஸ் பட்லர்
    X

    ஆடும் லெவனை தேர்வு செய்வதில் பெரிய தலைவலி காத்திருக்கிறது- ஜோஸ் பட்லர்

    இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவனை தேர்வு செய்வதில் கடும் தலைவலி ஏற்படும் என பட்லர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். 2-வது இன்னிங்சில் விராட் கோலி உள்பட முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    அதன்பின் பிரிஸ்டோல் அடிதடி வழக்க தொடர்பாக கோர்ட்டில் ஆஜரானதால் லார்ட்ஸ் டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக லார்ட்ஸ் டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்தார். இவர் சதம் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் விராட் கோலியை வீழ்த்தி இந்தியா 107 ரன்னில் சுருள முக்கிய காரணமாக இருந்தார்.



    பிரிஸ்டோல் அடிதடி தகராறில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி அல்ல என்று கோர்ட் விடுவித்துள்ளது. இதனால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.



    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து 1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. பட்லர், 6. பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), 7. கிறிஸ் வோக்ஸ், 8. சாம் குர்ரான், 9. அடில் ரஷித், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    தற்போது பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியதால் ஆடும் லெவனில் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டால் கிறிஸ் வோக்ஸ்தான் வழக்கப்படி நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் சாம் குர்ரான் நீக்கப்பட வேண்டும். இவர் முதல் டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லார்ட்ஸ் டெஸ்டிவ் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதனால் இங்கிலாந்து இருவரில் ஒருவரை நீக்க யோசிக்கும்.



    அப்படி என்றால் ஜோஸ் பட்லர், போப், அடில் ரஷித் ஆகியோர்தான் லிஸ்டில் உள்ளனர். அடில் ரஷித் சுழற்பந்து வீச்சாளர். சுழற்பந்து வீச்சாளர் வேண்டாம் என்றால்தான் அடில் ரஷித் நீக்கப்படுவார். இல்லை எனில் பட்லர், போப் ஆகிய பேட்ஸ்மேன்களில் ஒருவர்தான் நீக்கப்பட வேண்டும்.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு ஆடும் லெவனை தேர்வு செய்வதில் பெரும் தலைவலி காத்திருக்கிறது. ஜோஸ் பட்லரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×