search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்
    X

    இந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் ஜெப்ரி பாய்காட் கடுமையாக விமர்சித்து உள்ளார். #ENGvIND #GeoffreyBoycott
    ஜெப்ரி பாய்காட் இது தொடர்பாக டெய்லி டெலி கிராப் பத்திரிகையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய வீரர்கள் இதுவரை தங்களையும், தங்களது ஆதரவாளர்களையும் தலைகுனிய வைத்துள்ளனர். பேட்டிங் பொறுப்பற்றதாக இருந்தது. அறியாமை தனத்துடன் விளையாடினர். இந்திய அணியின் பேட்டிங் முட்டாள் தனமாக இருந்தது.

    ‘அவுட் சுவிங்கர்’ வீசினால் யோசனை இல்லாமல் பேட்டை கொண்டு செல்வதா? முரளிவிஜய் ஆடிய விதம் மிகவும் மோசமான செயலாகும். இங்கிலாந்து ஆடுகளம், தட்பவெப்பநிலை ஆகியவற்றை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக கணிக்க தெரியவில்லை.


    இந்திய வீரர்கள் சரியான முறையில் வலை பயிற்சி மேற்கொள்ளவில்லை. இங்கிலாந்தில் வித்தியாசமாக எப்படி ஆடப்போகிறோம் என்பதை தங்களது மூளைக்குள் ஏற்றிக் கொள்ளவில்லை.

    இந்திய ஆடுகளங்களில் பேட்டிங் செய்ததே பழக்கப்பட்டவர்கள். இந்தியாவில் உள்ள ‘பிட்ச்’கள் மட்டையானது. வறண்டது. பந்துகள் எழும்பாது. அங்கு புதிய பந்துகள் ஒன்றுமே ஆகாது. இதனால் எளிதாக ரன்களை குவித்தார்கள்.

    பந்தின் பளபளப்பு விரைவில் தேய்ந்துவிடும். அங்கு பேட்ஸ்மேன்கள் தான் அரசர். நேரடியாக எந்த ஷாட்களையும் ஆட முடியும்.

    இந்திய அணி இங்கிலாந்துக்கு அலட்சியத்துடனும், தலைக்கணத்துடனும் வந்தது. எங்கு வேண்டுமானாலும் தங்கள் இஷ்டப்படி பேட்டிங் செய்ய முடியும் என்ற நினைப்பில் இருந்தனர். டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளவில்லை.

    பெரும்பாலான அணிகள் உள்நாட்டில் வென்று வெளியே போய் தோற்பதால் முட்டாள் தனமாக பொருத்தமின்மையாக மாறி வருகிறது. பெரிய அணிகள் சிறந்த வீரர்கள் எல்லா விதமான ஆடுகளத்திலும் விளையாடுவது தங்களை சோதித்துக் கொள்வதற்காகவே.

    இவ்வாறு பாய்காட் கூறியுள்ளார்.  #ENGvIND #GeoffreyBoycott
    Next Story
    ×