search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்
    X

    லார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்

    லார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்வி எதிரொலியாக தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். #GautamGambhir
    புதுடெல்லி :

    லண்டன் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. 1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும்.

    இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், இந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது பரவலாக கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. 

    இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் குறித்து இந்திய அணியின் மீது தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ’ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸ்களும் இந்திய அணிக்கு சற்று கடினமாக இருந்தது. ஆனாலும் அதில் இருந்து மீள இந்திய அணி எவ்வித போராட்டத்திலும் ஈடுபடாமல் ஆட்டம் மூன்று நாட்களிலேயே முடிந்து விடும் என எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி போராடி கடைசி நாள் வரை ஆட்டத்தை நகர்த்தி இருக்க வேண்டும் அதன் பிறகு முடிவு எப்படி அமைந்திருந்தாலும் பரவாயில்லை. இந்திய அணி தோல்வி அடைந்த விதம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இனி இந்தியாவால் தொடரை கைப்பற்றுவது கடினம் தான், எனினும் வரும் ஆட்டங்களில் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி பேட்ஸ்மேன்களும் ரன் குவித்தால் இந்த தோல்விகளில் இருந்து மீண்டு வர முடியும். ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் நிலையில் களமிறக்குகிறோம் ஆனாலும் 193 எனும் இலக்கை நம்மால் துரத்த முடியவில்லை, எனவே இந்த இடத்தில் கண்டிப்பாக மாற்றம் செய்வது அவசியம் என நினைக்கிறேன்.

    அடுத்து வரும் ஆட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு போட்டியில் டிரா செய்தாலும், எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும்’ என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். #GautamGambhir
    Next Story
    ×