search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா அடுத்தடுத்த நாளில் விளையாடுவதால் யாரும் செத்துவிட போவதில்லை- டீன் ஜோன்ஸ்
    X

    இந்தியா அடுத்தடுத்த நாளில் விளையாடுவதால் யாரும் செத்துவிட போவதில்லை- டீன் ஜோன்ஸ்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அடுத்தடுத்த நாளில் விளையாடுவதால் யாரும் செத்துவிட மாட்டார்கள் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடு்தமத மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா 18-ந்தேதி இந்த தொடருக்கு தகுதி பெறும் அணியோடு மோதுகிறது. அடுத்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    அதேவேளையில் பாகிஸ்தான் 16-ந்தேதிக்குப் பின் இரண்டு இடைவெளிவிட்டு இந்தியாவை எதிர்கொள்கிறது. முக்கியமான போட்டிக்கு முன் ஓய்வு இல்லாமல் அட்டவணை தயாரித்துள்ளதாக பிசிசிஐ கண்டனம் தெரிவித்திருந்தது இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், அடுத்தடுத்த நாளில் விளையாடுவதால் யாரும் செத்துவிடமாட்டார்கள் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில் ‘‘நம்முடைய காலத்தில் அடுத்தடுத்து நாளில் விளையாடி இருக்கிறோம். ஆகவே, தற்போது ஏன் புகார் செய்ய வேண்டும்?. ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடத்தான் செய்கிறார்கள். இங்கிலாந்து தொடரின்போது மூன்ற முறை 11 நாட்கள் தொடர்ந்து விளையாடியிருக்கிறோம்.



    இது கொஞ்சம் கஷ்டானதுதான் என்பது எனக்குத் தெரியும், ஆனால் ஏன் பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திய அணி தொடர்ந்து விளையாடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

    களைப்பு ஒரு பிரச்சனையாக இருக்கலாம், ஆனால், தற்போதுள்ள வீரர்கள் தடகள் வீரர்கள் போன்றும் நம்பமுடியாத அளவிற்கான பிட்டையும் பெற்றுள்ளனர். அவர்கள் சிறப்பாகத்தான் இருப்பார்கள்.

    இந்தியா அடுத்தடுத்த நாளில் விளையாடுவதால் யாரும் செத்துவிடப் போவதில்லை என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
    Next Story
    ×