search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே?
    X

    லார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே?

    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா படுதோல்விக்கு வீரர்களின் மோசமான ஆட்டத்துடன் வானிலையும் முக்கிய காரணம் என்பதை அலச வேண்டியுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. ஆண்டர்சன், பிராட் ஆகியோரது பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்த போதிலும் சாம் குர்ரான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் இந்தியாவின் வெற்றியை பறிகொடுத்துவிட்டனர்.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி சில போட்டிகளில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. லார்ட்ஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கக் கூடிய மைதானம் ஆகும். இதனால் போட்டி நடைபெறுவதற்கு முன்பு இரண்டு அணிகளும் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்ற பேச்சுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கு மற்றொரு காரணம் இங்கிலாந்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருப்பதுதான்.



    இந்நிலையில்தான் போட்டி நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. 2-வது நாளும் மழையால் ஆட்டம் தடைபெற்றது. இந்தியா ஆல்அவுட் ஆன 35.2 ஓவருடன் 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

    அதன்பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்கேர் செய்தது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 130 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.



    இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோரும் களம் இறங்கியதும், பேட்ஸ்மேன் சொதப்பலும்தான் தோல்விக்கு காரணம் என்று கடும் விமர்சனம் எழும்பியுள்ளது. உச்சக்கட்டமாக தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் பிசிசிஐ மோசமான ஆட்டம் குறித்து விளக்கம் கேட்க உள்ளது.

    முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது குறித்து யாரும் விமர்சனம் எழுப்பாத நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மீது பழிபோடுகிறார்கள். ஆனால், தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டும்தானா? காரணம் என பார்க்க வேண்டும். லார்ட்ஸ் டெஸ்டில் வானிமை மையம் இந்தியாவிற்கு எதிராக தாண்டவம் ஆடியது. 2-வது நாள் மழை விட்டபிறகு ஆட்டம் தொடங்கியது. இந்தியா டாஸ் தோற்று பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.



    6 ஓவர்கள் போடுவதற்குள் மழை மீண்டும் குறுக்கீட்டது. இங்கிலாந்து ஆடுகளத்தில் மேகமூட்டமாக இருந்தாலோ, மழை விட்டுவிட்டு பெய்து ஆடுகளம் சற்று ஈரமாக இருந்தாலோ பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் இந்தியா 107 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியா ஆல்அவுட் ஆன பிறகு ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இதுபோன்ற வானிலை இருக்கும்போது இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல எந்தவொரு நாட்டு பேட்ஸ்மேன்களுக்கும் இதே கதிதான், குறிப்பாக எங்கள் நாட்டு பேட்ஸ்மேன்கள் கூட நாங்கள் பந்து வீசினால் திணறிப் போவர்கள்’’ என்றார்.

    அதுபோகட்டும் 3-வது நாள் இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும்போது வெயில் சுல்லென்று அடித்தது. இதனால் 15 ஓவர்களுக்குப் பிறகு பந்து ஸ்விங் ஆகவில்லை. பந்து வேலை செய்யும்போது இந்தியா 131 ரன்னுக்கள் ஐந்துவிக்கெட்டுக்களை சாய்த்துவிட்டது. ரிவர்ஸ் ஸ்விங், சுழற்பந்து வீச்சுக்கு டர்ன் என எதுவுமே இல்லை. இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் எளிதாக ரன் சேர்த்தனர். 24 டெஸ்டில் 863 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவரால் முதல் சதத்தை பதிவு செய்ய முடிந்தது.

    3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும். 39 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது.



    4-வது நாள் காலையில் வானிலை மேகமூட்டமாக இருந்ததால், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டிக்ளேர் செய்தார். இந்தியா பேட்டிங் செய்யும்போது அவ்வப்போது சிறுசிறு மழைத்துளிகள் விழுந்த வண்ணம் இருந்தது. உணவு இடைவேளையின்போது மழை பெய்தது. இதைப் பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து இந்தியாவை 130 ரன்களில் சுருட்டிவிட்டனர்.

    இதனால் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களம் இறங்கியது இந்தியா தோல்விக்கு காரணம் என்ற சொல்லிவிட இயலாது. வானிலை முக்கிய பங்கு வகித்தது. ஒருவேளை மழை பெய்யாமல் இருந்திருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருந்திருக்கும்.

    இதனால் லார்ட்ஸ் டெஸ்டை வைத்து மட்டுமே ஒட்டுமொத்த இந்திய அணியை எடைபோடுவது சரியாகுமா.....
    Next Story
    ×