search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- கார்சியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஹாலெப்
    X

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- கார்சியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஹாலெப்

    ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப், பிரான்ஸ் வீராங்கனை கார்சியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #RogersCup #SimonaHalep
    மாண்ட்ரியல்:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் தரநிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியாவை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஹாலெப்பின் ஆதிக்கம் இருந்தது. முதல் செட்டை சற்று போராடி கைப்பற்றினாலும், இரண்டாவது  செட்டை எளிதாக வென்றார் சிமோனா. இறுதியில்  7-5 6-1 என்ற செட்கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பிரெஞ்சு ஓபன் சாம்பியனான கார்சியாவை ரோஜர்ஸ் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டு முறை சிமோனா ஹாலெப் வீழ்த்தி உள்ளார்.



    இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பார்த்தியை ஹாலெப் எதிர்கொள்ள உள்ளார். இவர் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை நேர்செட்களில் வீழ்த்தியவர் ஆவார். எனவே, இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #RogersCup #SimonaHalep
    Next Story
    ×