search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது
    X

    லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது

    இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். புஜாரா ஒரு ரன்னில் அவுட்டானார். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது

    அதன்பின் இறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.



    இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது.
     
    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆண்டர்சன், சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.
    Next Story
    ×