search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரிபியன் பிரீமியர் லீக்- வார்னர், பொல்லார்டு சொதப்பலால் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் தோல்வி
    X

    கரிபியன் பிரீமியர் லீக்- வார்னர், பொல்லார்டு சொதப்பலால் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் தோல்வி

    கரிபியின் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் வார்னர் மற்றும் பொல்லார்டு சொதப்பலால் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் தோல்வியை சந்தித்தது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 2018 சீசன் நேற்று தொடங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற செயின்ட் லூசியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் லின் 8 ரன்னிலும், சுனில் நரைன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த கொலின் முன்றோ 48 பந்தில் 68 ரன்கள் குவித்தார். பிராண்டன் மெக்கல்லம் 13 ரன்னில் வெளியேற விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் 27 பந்தில் 50 ரன்கள் அடிக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

    பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் அந்த்ரே பிளெட்சர், டேவிட் வார்னர் ஆகியோர் தொடங்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிளெட்சர் 11 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார். ஆனால் முதன்முறையாக சிபிஎல் தொடரில் களம் இறங்கிய வார்னர் 9 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


    கொலின் முன்றோ

    அதன்பின் வந்த லென்டில் சிம்மன்ஸ், கார்ன்வால், மார்க் சேப்மான் சொற்ப ரன்களில் வெளியே செயின்ட் லூசியா அணி தடுமாறியது.

    கேப்டனும், அதிரடி வீரரும் ஆன பொல்லார்டு 27 பந்துகளை சந்தித்து 12 ரன்னில் வெளியேற 17.3 ஓவரில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெயின் பிராவோ 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
    Next Story
    ×