search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி டி20யில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்
    X

    கடைசி டி20யில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காள தேசம் 2-1 என தொடரை அசத்தலாக கைப்பற்றியது. #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும், 2-வது ஆட்டத்தில் வங்காள தேசமும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி அமெரிக்கா நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. புளோரிடாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி லித்தோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமிம் இக்பால் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். லித்தோன் தாஸ் 32 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.



    அதன்பின் வந்த ஷாகிப் அல் ஹசன் 24 ரன்களும், மெஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க விக்கட்டுக்கள் சீரான இடைவெளில் சரிந்து கொண்டே வந்தது.

    அதிரடி மன்னன் அந்த்ரே ரஸல் பட்டாசாக வெடித்தார். அவர் 21 பந்தில் 47 ரன்கள் குவித்தார். அப்போது 17.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது.



    இதில் வங்காள தேசம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. லித்தோன் தாஸ் ஆட்ட நாயகன் விருதையும், ஷாகிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்காள தேசம் 2-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வங்காள தேசம் 2-1 எனக் கைப்பற்றியது.
    Next Story
    ×