search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டார்கெட்டை நெருங்கி வந்து தோல்வி- எட்ஜ்பாஸ்டனுக்கு 4-வது இடம்
    X

    டார்கெட்டை நெருங்கி வந்து தோல்வி- எட்ஜ்பாஸ்டனுக்கு 4-வது இடம்

    இந்திய டெஸ்ட் அணி டார்கெட்டை நெருங்கி வந்து தோல்வியை சந்தித்ததில் எட்ஜ்பாஸ்டனுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களும், 2-வது இன்னிங்சில் 180 ரன்கள் சேர்த்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது.

    193 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 194 ரன்கள்தானே, இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. முரளி விஜய் 6 ரன்னிலும், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் தலா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ரகானே 2 ரன்னிலும், அஸ்வின் 13 ரன்னிலும் ஆட்டமிழக்க 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 43 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இந்தியாவிற்கு 84 ரன்கள் தேவை. கைவசம் விராட் கோலியுடன் ஐந்து விக்கெட்டுக்கள் இருந்ததால் இந்தியா வெற்றிபெறும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.



    ஆனால் விராட் கோலி 51 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 162 ரன்னில் சுருண்டு, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மிகவும் குறைவான ரன்னில் இந்தியா தோல்வியடைந்ததில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் 4-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு 12 ரன்னில் தோல்வியடைந்தது முதல் இடத்தையும், பெங்களூரில் 1987-ம் ஆண்டு 16 ரன்னில் தோல்வியடைந்து 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் 16 ரன்னில் தோற்றது 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    Next Story
    ×