search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் தரவரிசை- விராட் கோலி அதிக புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்தை பிடிக்க வாய்ப்பு
    X

    டெஸ்ட் தரவரிசை- விராட் கோலி அதிக புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்தை பிடிக்க வாய்ப்பு

    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் விராட் கோலி இங்கிலாந்து தொடரில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. #ViratKohli
    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விளங்கிய ஸ்மித் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் 929 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 855 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் ஓராண்டு தடைபெற்றுள்ளார். அவர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது.



    அதேவேளையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற புதன்கிழமை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 920 புள்ளிகளுக்கு மேல் குவித்து சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது.

    டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் அதிகபட்சமாக 941 புள்ளிகளும், ஸ்மித் 941 புள்ளிகளும், ஜோ ரூட் 917 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.



    டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 125 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். ஒருவேளை இங்கிலாந்து 5-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தால், 10 புள்ளிகள் பெற்று 107 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறிவிடும். தென்ஆப்பிரிக்கா 106 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கும், ஆஸ்திரேலியா 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கும், நியூசிலாந்து 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கும் சரியும். #ICCRankings #ENGvIND
    Next Story
    ×