search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா மற்றும் எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது
    X

    இந்தியா மற்றும் எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது

    இந்தியா மற்றும் எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் எந்த அணிக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியை எதிர்த்து இந்தியா விளையாடியது.

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முரளி விஜய் 53 ரன்னிலும், விராட் கோலி 68 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களில் அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 51 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்திய அணி 100.2 ஓவரில் 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    எசக்ஸ் அணி சார்பில் பால் வால்டர் 4 விக்கெட்டும், கோல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, எசக்ஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் வெஸ்லி, பெப்பர் மற்றும் பால் வால்டர்  ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். இறுதியில் எசக்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்து தனது முதல் இன்ன்னிங்சை முடித்துக் கொண்டது.

    இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தவான் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா 23 ரன்களில் வெளியேறினார்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்தனர், லோகேஷ் ராகுல் 36 ரன்னும், ரகானே 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்த பயிற்சி ஆட்டம் எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
    Next Story
    ×