search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரொனால்டோவின் உடல் திறனை பார்த்து வியந்த யுவான்டஸ் மருத்துவக் குழு
    X

    ரொனால்டோவின் உடல் திறனை பார்த்து வியந்த யுவான்டஸ் மருத்துவக் குழு

    20 வயது இளைஞனை போன்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உடல் திறனைப் பார்த்து யுவான்டஸ் மருத்துவ அதிகாரிகள் வியந்து போனார்கள். #CR7 #Juventus
    கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார். இந்த வருடத்துடன் ரியல் மாட்ரிட் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, புதிதாக யுவான்டஸ் அணியில் இணைந்துள்ளார்.

    யுவான்டஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்தவற்கு முன் ரொனால்டோவிற்கு யுவான்டஸ் மெடிக்கல் குழு பரிசோதனை செய்தது. அப்போது சில டெஸ்டுகளின் முடிவுகளை பார்த்து அசந்து விட்டனர்.

    ரொனால்டோ பரிசோதனை முடிவுகள் குறித்து இத்தாலியில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சிலவற்றில் ரொனால்டோவின் திறன் 13 வயது சிறுவனைவிட சிறந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளது.



    ரொனால்டோவின் உடலில் 7 சதவீதம் கொழுப்பு உள்ளது. ஒரு தொழில்முறை விளையாட்டு வீரரை விட இது 3 சதவீதம் குறைவாகும். சதையின் வலிமை 50 சதவிகிதமாக உள்ளது. இது மற்ற வீரர்களை விட நான்கு சதவிகிதம் ஆகும்.

    உலகக்கோப்பை தொடரின்போது மணிக்கு 21.1 மைல் வேகத்தில் ஓடினார். மருத்துவ பரிசோதனையில் இந்த வேகம் பிரதிபலித்துள்ளது. அவரிடம் 20 வயது இளைஞருக்கான திறன் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
    Next Story
    ×