search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வு நாட்களில் பாலிவுட் நடிகர்களுடன் ஜாலியாக கால்பந்து விளையாடும் எம்எஸ் டோனி
    X

    ஓய்வு நாட்களில் பாலிவுட் நடிகர்களுடன் ஜாலியாக கால்பந்து விளையாடும் எம்எஸ் டோனி

    இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்எஸ் டோனி ஜாலியாக கால்பந்து விளையாடி பொழுதை கழிக்கிறார். #MSDhoni
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் டோனி, ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துவிட்டது.

    ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி வரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டோனி டெஸ்ட் அணியில் இல்லை என்பதால் அவருக்கு ஆசிய கோப்பை வரை சுமார் 50 நாட்கள் ஓய்வுதான்.




    டோனிக்கு கால்பந்து என்றால் மிகவும் பிடிக்கும். அவர் கிரிக்கெட் இல்லாத நேரத்தில் கால்பந்து விளையாடுவார். தற்போது ஓய்வில் இருப்பதால் பாலிவுட் நடிகரும், தாதக் படத்தின் நாயகரும் ஆன இஷான் கட்டேருடன் இணைந்து கால்பந்து விளையாடினார். மேலும் அவருக்கு டிப்ஸ்கள் வழங்கினார்.
    Next Story
    ×