search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடுகளம் சரியில்லை என்று ஒருபோதும் சாக்குபோக்கு சொல்லமாட்டோம்- ரவிசாஸ்திரி
    X

    ஆடுகளம் சரியில்லை என்று ஒருபோதும் சாக்குபோக்கு சொல்லமாட்டோம்- ரவிசாஸ்திரி

    ஆடுகளம் சரியில்லை, சூழ்நிலை சரியில்லை என்று ஒருபோதும் சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க மாட்டோம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா சசக்ஸ் அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. ஆனால் இங்கிலாந்தில் தற்போது கடும் வெயில் தாக்கம் இருப்பதால் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு, தற்போது விளையாடி வருகிறது. மூன்று நாட்களாக குறைக்கப்பட்டதற்கு இந்திய அணி நிர்வாகம் ஆடுகளம் மீதான அதிருப்திதான் காரணம் என்று கூறப்பட்டது.

    இதை மறுத்துள்ள இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆடுகளம் குறித்து ஒருபோதும் குறைகூட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரவிசாஸ்திரி கூறுகையில் ‘‘இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை. இந்த தொடர் முழுவதும் நாங்கள் ஆடுகளம் குறித்தோ, சூழ்நிலை குறித்தோ சாக்குபோக்கு சொல்வதை பார்க்க முடியாது.

    ஆடுகளம் நன்றாக இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார். மேலும் ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் உள்ளது. இதை எடுத்து விட நீங்கள் விரும்புகிறீர்களா? என்றார். அதற்கு நான் முற்றிலும் மறுத்தேன். அது உங்களுடைய விருப்பம். நீங்கள் எந்த ஆடுகளம் தந்தாலும், அதற்கு தயார். அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்றேன். அங்கே புற்கள் இருந்தது. ஆகவே, அதில் இருந்து ஏதும் எடுக்கவில்லை.



    எங்களுடைய சவால் எதிரணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். நாங்கள் எங்கே சென்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். நாங்கள் எப்போதும் சிறந்த வெளிநாட்டு அணி என்ற பெயரை பெற விரும்புவோம். யாராக இருந்தாலும் இறுதியில் இந்த அணி மீதுதான் குற்றம்சாட்டுவார்கள்.’’ என்றார்.
    Next Story
    ×