search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பையில் விளையாடக் கூடாது: மோசமான அட்டவணை குறித்து சேவாக் சாடல்
    X

    ஆசிய கோப்பையில் விளையாடக் கூடாது: மோசமான அட்டவணை குறித்து சேவாக் சாடல்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை மோசமானது. இதனால் இந்தியா விளையாடக் கூடாது என்று சேவாக் சாடியுள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கடெ் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் என 6 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 11-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் இந்தியா 19-ந்தேதி முதல் ஆட்டத்தில் வியைாடுகிறது.

    இந்த தொடர் 15-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் அடுத்தடுத்த நாள் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாடும் அடுத்ததடுத்த நாட்களில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்ட அட்டவணை பார்த்தும் நான் அதிர்ச்சியடைந்தேன். இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டிகளில் கூட இரண்டு நாட்கள் இடைவெளி இருந்தது.



    துபாயில் கடுமையான வெயில் தாக்கம் இருக்கும். இதில் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் விளையாட வேண்டியுள்ளது. ஆகவே. இது சரியான அட்டவணை இல்லை.

    ஏன் ஆசியக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூக்குரலிட வேண்டும். ஆசிய கோப்பையில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அணிகள் உள்நாடு அல்லது வெளிநாடு தொடருக்கு தயாராக வேண்டியதுதான். அடுத்தடுத்த நாட்களில் விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே கடினமானது.
    Next Story
    ×