search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் ரன் மெஷினை வீழ்த்த மைக் ஹசியின் ஆலோசனை
    X

    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் ரன் மெஷினை வீழ்த்த மைக் ஹசியின் ஆலோசனை

    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அதிரடி வீரர் பகர் சமானை சமாளிக்க இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மைக் ஹசி ஆலோசனை வழங்கியுள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி ஆகியவற்றிற்கு இடையிலான 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

    இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த தொடக்க வீரர் பகர் சமான். இவர் அடித்த சதத்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் பகர் சமான் தற்போது சூப்பர் ஃபார்மில் உள்ளார். கடந்த வாரம் முடிவடைந்த ஜிம்பாப்வே தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அதில் சதம், இரட்டை சதம் என துவம்சம் செய்து, அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பகர் சமான் சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன மைக் ஹசி பகர் சமானை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘டைட் லைன் மற்றும் லெந்த் பந்துகளை தொடர்ச்சியாக வீசி நெருக்கடியை உண்டாக்க முயற்சிக்க வேண்டும். சில டாட் பால் வீசி நெருக்கடி கொடுத்தால், அவர் விரும்புவதை விட முன்கூட்டியே பெரிய ஷாட்டுகள் அடிக்க முயற்சி செய்வார்.

    அதேபோல் பந்துகளின் வேகத்தை குறைத்து, அதிகரித்து வீச வேண்டும். பகர் சமான் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ரன் குவித்து ஃபார்மில் உள்ளார் என்ற நினைத்து விடக்கூடாது. இந்தியாவிற்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்து வெகுநாட்கள் ஆகவில்லை.



    அட்டங்கிங், விரைவாக ஸ்கோர் அடித்தல் போன்ற வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடினம். இவர் மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் பந்தை விரட்ட முடியும். பந்து வீச்சாளர்களில் குறைந்த அளவு தவறு செய்பவர்கள் மிகவம் குறைவானர்களே.

    ஆசிய கோப்பை தொடரில் இந்தியா அல்லது பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இரண்டு அணிகளும் சமீப காலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் சிறந்த அணிகள்’’ என்றார்.
    Next Story
    ×