search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சி அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? கோவையுடன் இன்று மோதல்
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சி அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? கோவையுடன் இன்று மோதல்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியுடன் கோவை கிங்ஸ் அணி மோதுகிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல்.(தமிழ்நாடு பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளிகள் (4 போட்டி) வென்று முன்னிலையில் உள்ளது. காரைக்குடி காளை (3), திருச்சி வாரியர்ஸ் (2), டூட்டி பேட்ரியாட்ஸ் (3), மதுரை பாந்தர்ஸ் (3) ஆகிய நான்கு அணிகள் தலா 4 புள்ளியுடனும், கோவை கிங்ஸ் (3) அணி 2 புள்ளிகளுடனும் உள்ளன. காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தலா 3 ஆட்டம்) ஆகிய அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.

    டி.என்.பி.எல். போட்டியின் 13-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் - அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருச்சி வாரியர்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை 4 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 31 ரன் வித்தியாசத்திலும் வென்றது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திருச்சி அணி திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் இந்திரஜித், சுரேஷ்குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் கணபதி-சந்திரசேகர் சிறப்பாக செயல்படுகிறார்.

    கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் காரைக்குடி காளையை சூப்பர் ஓவரில் வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 விக்கெட்), டூட்டி பேட்ரியாட்ஸ் (11 ரன்) அணிகளிடம் தோற்றது.

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் கோவை கிங்ஸ் இருக்கிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
    Next Story
    ×