search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்- 61 வருட சாதனையுடன் இணைந்தார் மகாராஜ்
    X

    ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்- 61 வருட சாதனையுடன் இணைந்தார் மகாராஜ்

    கொழும்பு டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி ஒரே இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார் மகாராஜ். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை 338 ரன்கள் குவித்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் அசத்தினார். அவர் 9 விக்கெட்டுக்களை அள்ளினார். 5-வது விக்கெட்டாக வீழ்ந்த ரோஷன் சில்வாவை மட்டும் ரபடா வீசினார்.

    ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடம்பிடித்ததுடன், 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் ஹக் டெய்பீல்டு 1957-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் 9 விக்கெட் வீழ்த்திருந்தார். அதன்பின் 61 ஆண்டுகள் கழித்து மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் பட்டியலில் முதல் இடத்தை டெய்பீல்டு உடன் பகிர்ந்துள்ளார்.



    இங்கிலாந்தின் ஜிம் லேக்கர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளனார். ஜிம் லேக்கர் அதேபோட்டியில் மற்றொரு இன்னிங்சில் 9 விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×