search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்விங் இல்லை என்றால் இந்தியா சிறப்பாக விளையாடும்- முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்
    X

    ஸ்விங் இல்லை என்றால் இந்தியா சிறப்பாக விளையாடும்- முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்

    டெஸ்ட் தொடரில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா சிறப்பாக விளையாடும் என கிரேம் ஸ்வான் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு காரணம் இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பிராட் ஸ்டூவர்ட்டின் ஸ்விங் பந்துதான். இவர்களை எதிர்த்து இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்தால் அது மிகப்பெரிய விஷயம்.

    தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரில் சாதிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்விங் இல்லை என்றால்தான் இந்தியா சிறப்பாக விளையாடும் என்று முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிரோம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்வன் கூறுகையில் ‘‘பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், இங்கிலாந்து ரிவர்ஸ் ஸ்விங்கைதான் நம்பியிருக்க வேண்டும். ஜேம்ஸ் ஆண்டர்சன் புதுப்பந்தில் சிறப்பாக வீசுவதுபோல், பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசுவதில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். அப்போது கோலி 60 முதல் 70 ரன்னில் களத்தில் இருக்கலாம்.



    இங்கிலாந்து கடந்த முறை சிறப்பாக விளையாடுவதற்கு காரணம், ஜேம்ஸ் ஆண்டர்சன் புதுப்பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்தார். இந்தியா மட்டும் புதுப்பந்தில் திணறுவதாக நினைக்கக் கூடாது. ஆண்டர்சன் பந்து ஸ்விங் ஆனால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் இந்தியா கதிதான்.

    பந்து ஸ்விங் ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றும். இல்லை என்றால் அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது மிகவும் சிறப்பான தொடராக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×