search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பையை தீர்மானிக்கும் போட்டியில் மட்டும் விளையாடுவது எளிதான காரியம் அல்ல- ஷர்துல் தாகூர்
    X

    கோப்பையை தீர்மானிக்கும் போட்டியில் மட்டும் விளையாடுவது எளிதான காரியம் அல்ல- ஷர்துல் தாகூர்

    வெற்றி கோப்பையை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டத்தில் மட்டும் களம் இறங்குவது எளிதான காரியம் அல்ல என வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றிபெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் இந்தியா மூன்று மாற்றங்களுடன் களம் இறங்கியது. உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், சித்தார்த் கவுல் ஆகியோர் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து ஜோ ரூட் (100) மற்றும் மோர்கன் (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 44.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது இந்திய வீரர் ஷர்துல் தாகூர் 10 ஓவர்கள் வீசி 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    முதல் இரண்டு போட்டியில் விளையாடாத ஷர்துல் தாகூர் 3-வது போட்டியில் விளையாடினார். ஒரு தொடரில் பெஞ்சில் இருந்துவிட்டு திடீரென கடைசி போட்டியில், அதுவும் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் விளையாடுவது எளிதான காரியம் இல்லை என்று ஷர்துல் தாகூர் தெரிவத்துள்ளார்.

    இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘நான் கடைசியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினேன். அப்போது இந்தியா தொடரை கைப்பற்றியதால், அந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை.

    நேற்றைய போட்டியில் எனக்கு உண்மையிலேயே சற்று பதட்டமாக இருந்தது. ஏனென்றால் இந்த ஆட்டம் தொடரை தீர்மானிக்கக் கூடியதாகும். வீரர்கள் மீது நெருக்கடி உண்டாக்கும்போது, வீரர்களுடைய பொறுப்ப அணியை முன்னோக்கிச் எடுத்துச் செல்வதுதான். சில நேரம் நமக்க சாதகமாக இருக்கலாம். சில நேரம் போட்டி கையைவிட்டு விலகிச் செல்லலாம்.



    ஒரேயொரு போட்டியில் வாய்ப்பு கிடைத்து மைதானத்திற்குள் களம் இறங்கும்போது, அணி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம்தான் எனது மனதிற்குள் இருக்கும். நேற்றைய போட்டியிலும் இந்த நிலைதான் இருந்தது. இந்தியா ‘ஏ’ அணியாக இருந்தாலும் சரி, இந்தியா சீனியர் அணியாக இருந்தாலும் சரி. என்னுடைய எண்ணம் இதுவாகத்தான் இருக்கும்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூர் இடம்பிடித்துள்ளார்.
    Next Story
    ×