search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி
    X

    அணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில், அணி தேர்வில் முன்னேற்றம் தேவை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
    லீப்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 44.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருந்தன.

    தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-


    நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இங்கிலாந்து, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் அருமையாக செயல்பட்டது. அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்.

    இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்திருக்க வேண்டும். ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இங்கு இதுபோன்ற ஆடுகளத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை.

    அணியில் சில மாற்றங்களை செய்தோம். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். ஆனால் அந்த உத்வேகத்தை அவரால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை.

    புவனேஸ்வர்குமார் அனுபவம் வாய்ந்தவர். ஆனால் சிறப்பாக செயல்படாவிட்டால் மாற்றங்கள் செய்வது தேவையற்றது போன்று தோன்றும்.

    எங்கள் அணிக்கு முன்னேற்றம் தேவையாக உள்ளது. ஒவ்வொரு அணி தேர்வும் பலம் வாய்ந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த தோல்வி நாங்கள் இன்னும் உழைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.

    எங்களுக்கு 15 ஆட்டங்கள் உள்ளன. இதில் பலம் வாய்ந்த ஆடும் லெவன் அணியை கண்டறிய வேண்டும். உலக கோப்பை தொடருக்கு முன்பாக சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்து இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்குகிறது. #ENGvIND #ViratKohli #TeamIndia
    Next Story
    ×